Wednesday, December 11, 2024

ஆட்சி அதிகாரத்தில் பங்கு

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று ஒன்றியத்தில் பேசும் திமுக, மாநிலத்திலும் தன் கூட்டணி கட்சிகளுடன் ஏன் அதிகாரத்தை பங்கிட்டுக்கொள்ளக்கூடாது? இது நியாயமான கோரிக்கை தானே? முதல்வரின் மகன் என்கிற அடிப்படையில் அவருக்கு உடனேயே எம்.எல்.ஏ பதவி, மந்திரி பதவி, துணை முதலமைச்சர் பதவி என்று மூன்றாண்டுகளில் அடுத்தடுத்து அதிகார உயரத்தில் ஏற்றி அழகுபார்க்கும் திமுகவை விமர்சிப்பதில் எந்தளவு நியாயம் உண்டோ, அதே அளவு நியாயம் சமூக செயல்பாடுகளில் தன்னை உட்படுத்திக்கொண்டு, எல்லா மக்கள் பிரச்சனைகளுக்கும் குரல் கொடுக்கும் பல்வேறு செயல்பாட்டாளர்கள் பொதுவெளியில் இருக்க, சினிமா நடிகர் என்னும் ஒரே கவர்ச்சியை வைத்துக்கொண்டு எந்தவித கொள்கைகளும் இல்லாமல் உடனேயே முதலமைச்சர் ஆவேன் என்பதிலும் இருக்கவேண்டும் அல்லவா?

Sunday, June 12, 2011

ஆழ்கடல்


கன்று ஈனாத பசுமாட்டிடமிருந்து பால் கறக்க முயல்வதைப்போல, சிந்தனைகளில் லயிக்காத மனத்திலிருந்து ஆக்கங்களை உருவாக்க முயற்ச்சிக்கிறேன்.எனக்கு இன்றைய சிந்தனைகள் நாளைய அவமானங்களாகும்போது, எதை நான் பதிவு செய்ய இங்கு? நான் எதை நோக்கி பயணிக்கிறேன்? முடிவான சிந்தனையை நோக்கியா? அல்லது சிந்தனைகளின் முடிவை நோக்கியா? ஆர்ப்பரிக்கும் அலைகள், நீரில் மிதந்து வரும் அழுக்குகளையே அள்ளி தெளிக்கும்போது, ஆழ்கடல், கரையில் காத்திருக்கும் கால்களுக்கு சொல்வதற்க்கு ஒன்றும் இல்லை.